திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (11:51 IST)

தீபாவளி டாஸ்மாக் மதுவிற்பனை: ரூ.430 கோடிக்கு என தகவல்..!

Tasmac
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மது விற்பனை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு தீபாவளியில் 430 கோடி ரூபாய் மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 மற்றும் தீபாவளி தினத்தில் மட்டும் 430 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன, அதில் தீபாவளி தினத்தில் மட்டும் 220 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.
 
கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளில் 467 கோடி மது விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 37 கோடி ரூபாய் மது விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மது விற்பனை குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
அதே நேரத்தில், தீபாவளிக்கு நான்கு நாள் விடுமுறை என்பதால், இன்றும் நாளையும் மது வாங்குவதற்காக மதுபிரியர்கள் காத்திருப்பதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 50 லட்சம் மது பெட்டிகள் கூடுதலாக தயாராக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 
 
தீபாவளி தினத்தில் பிரீமியம் மது விற்பனை 30 சதவீதம் அதிகரித்ததுடன், நடுத்தர வகை மதுவிற்பனை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மார்க் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran