மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலைமை: ஈரோடு, நெல்லையில் அதிகரிப்பு

beela
மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா நிலைமை
Last Modified வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:58 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை தினந்தோறும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் அவர் தெரிவித்த தகவலின்படி இன்று மட்டும் தமிழகத்தில் 96 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

இன்று மட்டும் கொரோனாவால் தாக்கப்பட்ட 96 பேர்களில் 26 பேர் ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் 16 பேர் நெல்லை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேரும் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர்

சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இருந்தது போல் அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒருவர் மட்டுமே என்ற வைரசால் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :