ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 10 ஆகஸ்ட் 2018 (06:40 IST)

வெங்கையா நாயுடு விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு

மாநிலங்களவைக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் ஆகியோர்களுக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு இன்று காலை விருந்து அளிக்கவுள்ளார். ஆனால் இந்த விருந்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பார்கள் என தெரிகிறது.
 
இந்த விருந்தில் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவின் விருந்தில் கலந்து கொள்ள போவதில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
ஆனால் அதே நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் உள்பட முக்கிய கட்சிகளின் உறுப்பினர்கள் மாநிலங்களவை தலைவரின் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.