திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (17:57 IST)

திண்டுக்கல் சீனிவாசன் சாப்பாட்டு ராமன்: விளாசும் வெற்றிவேல்!

திண்டுக்கல் சீனிவாசன் சாப்பாட்டு ராமன்: விளாசும் வெற்றிவேல்!

தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணம் குறித்த விவகாரம் சற்று மந்தமாகவே சென்றுகொண்டிருந்தது. ஆனால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் சமீபத்திய பேச்சு மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்தான சர்ச்சை ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.


 
 
தொடர்ந்து பிரதான செய்தியாக இடம்பெறும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிவிட்டது. திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, ஜெயலலிதாவை பார்த்ததாகவும், அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது எல்லாம் பொய் என தெரிவித்தார்.
 
சசிகலா யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தை தவிர யாரும் பார்க்கவில்லை என கூறி பரபரப்பை கொழுத்தி போட்டார். அதன் பின்னர் தினகரன் தரப்பினர் பதில் பேட்டிகளை அளித்து வருகின்றனர். தன் பங்கிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவை அமைச்சர்கள் அனைவரும் சந்தித்ததாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை தற்போது வெடிக்க காரணமான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வெற்றிவேல் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குறிப்பிட்ட காலத்தில் முடிவடையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதில் அளித்த வெற்றிவேல், குறிப்பிட்ட காலக்கெடு வைத்துவிட்டு விசாரணையை முடித்துவிட வேண்டும். ஒழுங்காக சென்றுகொண்டிருந்த நிலையில் திருச்சி நீதிமன்றம் ஆட்சியாளர்களை பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டது. இதை திசை திருப்புவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் போன்ற சாப்பாட்டு ராமன்களைவிட்டு இதுபோன்ற பிரச்னையை தேவையில்லாமல் கிளப்பிவிட்டார்கள் என்றார். அமைச்சரை சாப்பாட்டு ராமன் என வெற்றிவேல் விமர்சித்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.