வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 ஜூன் 2023 (09:01 IST)

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வாளுக்கு வேலி அம்பலம்: டிடிவி தினகரன் புகழாரம்..

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாளுக்கு டிடிவி தினகரன் புகழாரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர், தென்பாண்டி சிங்கம் என போற்றப்பட்டவருமான வாளுக்கு வேலி அம்பலம் அவர்களின் பிறந்த நாள் இன்று.
 
18ஆம் நூற்றாண்டில் பாகனேரி நாட்டின் தலைவராக திகழ்ந்த மாவீரர் வாளுக்குவேலி அம்பலம், மருது சகோதரர்களுக்கு துணை நின்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிவுடன் எதிர்த்து, சூழ்ச்சியால் வீரமரணம் அடைந்தவர்.
 
சிவகங்கை மாவட்டம் பாகனேரி சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் வாளுக்குவேலி அம்பலத்தை தங்கள் குல தெய்வமாகவே வழிபடுகின்றனர். மாவீரர் வாளுக்குவேலி அம்பலத்தின் பிறந்த நாளில் அவரது துணிவு மிக்க ஆளுமையை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
 
Edited by Mahendran