ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (23:25 IST)

கூவத்தூரை விட பத்து மடங்கு கவனிப்பு: அணி தாவ தயாராகும் எம்.எல்.ஏக்கள்

கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் வாக்கெடுப்புக்கு முன்னர் சில நாட்கள் அனைத்து எம்.எல்.ஏக்களும் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்படுவதுண்டு. 



 
 
இந்த நிலையில் கூவத்தூரை விட பத்து மடங்கு கவனிப்பு இருக்கின்றதாம் தினகரனின் ஆதரவை பெற்றுள்ள 19 எம்.எல்.ஏக்களுக்கு. புதுச்சேரி செல்லும் வழியில் ஸ்டார் ஓட்டலில் பிரியாணி, வஞ்சிரமீன் சாப்பாட்டின் பில்லே லட்சத்தில் இருந்ததாம். அதுமட்டுமின்றி இன்னும் ஏகப்பட்டு வசதிகள் செய்து தரப்போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த செய்தியை கேள்விப்பட்ட ஒருசில சபல எம்.எல்.ஏக்கள் அணிமாற விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், இப்படியே போனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அதோ கதிதான் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.புதுச்சேரி சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது அனேகமாக வெகுவிரைவில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்றே கூறப்படுகிறது