செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (15:54 IST)

கட்சி ஆஃபீஸை விற்ற கே.எஸ்.அழகிரி: உண்மை பின்னணி என்ன??

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அலுவலகத்தை கே.எஸ் அழகிரி விற்றுவிட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. 
 
கடலூர் மாவட்டத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு கடலூர், விருத்தாச்சலம், மங்கலம்பேட்டை ஆகிய பகுதிகளில் அலுவலகம் உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் விஜய சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் மங்கலம்பேட்டையில் உள்ள அலுவலகத்தை ரூ.20 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தெற்கு மாவட்ட தலைவர் விஜய சுந்தரம் பேட்டியளித்துள்ளார். 
 
இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய சுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.