சட்டப்பேரவை தலைவர் வேட்பாளராக பா.தனபால் அறிவிப்பு
தமிழக சட்டபேரவையின் தலைவர் வேட்பாளராக பா.தனபால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அதிமுக எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
சட்டசபையின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. அதில், ஸ்டாலின், கருணாநிதி உட்பட திமுக எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தமிழக சட்டபேரவை தலைவர் வேட்பாளராக பா.தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி ஜெயராமன், சட்டபேரவை துணைத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பா.தனபால் 2011-2016 தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.