புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (19:02 IST)

விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியவை: பட்டியலிடும் வருமான வரித்துறை!

விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியவை: பட்டியலிடும் வருமான வரித்துறை!

இன்று காலை முதல் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனை சசிகலா அணியினர் கண்டித்து பேட்டி கொடுத்துவந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கரும் வருமான வரித்துறை மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


 
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. காலை 4 மணி முதல் சோதனை நடக்கிறது என விஜயபாஸ்கர் கூறியது தவறு. காலை 6 மணி முதல் தான் சோதனை நடக்கிறது.
 
குழந்தையை பள்ளிக்கு அனுப்ப அனுமதிக்கவில்லை என விஜயபாஸ்கர் கூறியது தவறு. குழந்தையை பள்ளிக்கு அனுப்பக் கூறினோம். புத்தகப்பையை சோதனையிட்ட பின்னர் செல்ல அனுமதித்தோம். நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை.
 
மேலும், ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் விஜயபாஸ்கர் அறையில் சிக்கியது. சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள விஜயபாஸ்கர் அறையிலும் எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் வாக்காளர் பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது.
 
வாக்காளர் பட்டியலை வைத்து பணம் தந்ததற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளன. தமிழகத்தில் 50 இடங்களில் நடந்த சோதனையில் 4.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீட்டில் மொத்தம் 4.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.