தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு அறிவுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும் என்றும் காய்ச்சல் பாதிப்பு தொடர்பான அறிக்கையை தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.