வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:47 IST)

தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் வரவில்லை - பின்னணி என்ன?

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய, இன்று சென்னை வருவதாக இருந்த டெல்லி போலீசாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
டெல்லியில் நேற்று காலை சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை, தினகரன் தரப்பிற்கு பெற்றுத்தர ரூ.1.30 கோடி முன்பணம் பெற்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
எனவே,  தினகரனிடம் விசாரணை செய்வதற்காக டெல்லி போலீசார் இன்று சென்னை வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.  போலீசாருக்காக விமான பயண சீட்டுகள் நேற்று முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவை திடீரெனெ ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி போலீசாரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரிடம் தொடர்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதால், அவரிடமிருந்து முழுமையான தகவல்களை திரட்டி பிறகு டெல்லி போலீசார் சென்னை வருவார்கள் என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.