வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2017 (17:07 IST)

புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுகிறது: ராமதாஸை விளாசும் தீபா!

புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுகிறது: ராமதாஸை விளாசும் தீபா!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டதையடுத்து இரட்டை சிலை சின்னத்தை நிரந்தராக முடக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார்.


 
 
இதனை கண்டித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார் தீபா. இந்நிலையில் அவர் அதிமுக தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் விரைவில் தான் கைப்பற்றுவதாக கூறினார்.
 
மேலும் அந்த அறிக்கையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க ராமதாஸ் கூறியதை கண்டித்தார். அதில், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் போன்றோர்கள் இரட்டை இலையை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று அறிக்கை விடுவது கண்டனத்திற்குரியதாகும்.
 
எம்ஜிஆர் அவர்களால் கண்டெடுத்த இரட்டை இலை பல வெற்றி சரித்திரத்தை உருவாக்கியுள்ளது. புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரட்டை இலை மூலம் பல அரசியல் திருப்புமுனைகளை ஏற்படுத்தி தொடர் வெற்றி சரித்திரத்தை நம் கையில் கொடுத்து சென்றுள்ளார்.
 
எடுத்தேன் கவிழ்ப்பேன் என்ற பாணியில் ராம்தாஸ் போன்றவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கத்தையும் சின்னத்தையும் பேசுவது புலியைப் பார்த்து எலி எக்காளம் விடுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.