மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தங்களை ஒதுக்கி வைக்கவில்லை என அவரின் அண்ணன் மகள் தீபா பேட்டியளித்தார்.
ஜெயலலிதா பெங்களூரில் உள்ள தனது அண்ணன் ஜெயக்குமாரோடு பேசுவதில்லை எனவும், அவர்களை ஒதுக்கி வைத்து விட்டார் எனவும் பொதுவாக கூறப்பட்டு வந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், எனது அத்தைக்கும் எனது தந்தைக்கும்(ஜெ.வின் அண்ணன்) பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுவது பொய். அதில் உண்மையில்லை.
நானும் எனது தந்தையும் அடிக்கடி போயஸ் கார்டன் சென்று அவரை சந்தித்து விட்டு பேசி விட்டு வருவோம். எங்கள் குடும்பத்தை அவர்தான் பார்த்துக் கொண்டார்.
என்னைத்தான் அவர் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என என் தந்தை விரும்பினார். ஆனால் எனது அத்தையோ சுதாகரனை தத்தெடுத்ததாக செய்திகள் வெளியானது. மேலும், சுதாகரனின் திருமணத்தை அவர் நடத்தப்போவதாகவும் தெரிய வந்தது.
இது எனது தந்தையின் மனதை மிகவும் பாதித்தது. அதுவே அவரின் மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.
கடைசியாக 2004ம் ஆண்டு அவரை சந்தித்து விட்டு வந்தேன். அதன் பின் நான் மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்று விட்டேன். அதன் பின் 2017ம் ஆண்டு போயஸ் கார்டன் சென்று அவரை சந்திக்க முயன்றேன். ஆனால், அவரது அறையிலிருந்த இண்டர்காம் மூலம், காத்திருந்த என்னிடம் தொலைபேசியில் பேசினார். தான் தற்போது வேலையாக இருப்பதால் தன்னை சந்திக்க முடியாது எனக்கூறிவிட்டார். அதன்பின் அவரை சந்திக்க முடியவில்லை.
அதன் பின், அவரை சந்திக்க சசிகலா என்னை அனுமதிக்கவே இல்லை. என்ன பற்றி தவறாக எனது அத்தையிடம் கூறி அவர் மனதை மாற்றி விட்டார்” என தீபா கூறினார்.