காவல் ஆய்வாளர் மீது கற்பழிப்பு புகார் அளித்த பெண்ணிற்கு கொலை மிரட்டல்

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 30 ஏப்ரல் 2015 (15:48 IST)
காவல்துறை ஆய்வாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்த பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் முருகேசன். இவருக்கும், திருச்சி கே.கே.நகர். பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா (35) என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படவே காவல் ஆய்வாளர் முருகேசன், தனது மனைவியை விட்டு பிரிந்து பரிமளாவுடன் வசித்து வந்துள்ளார். சில மாதங்கள் கழித்து முருகேசன் பரிமளாவை விட்டுவிட்டு மீண்டும் மனைவியுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.
பின்னர் முருகேசன் திருச்சியில் இருந்து நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருச்சிக்கு வந்த முருகேசன் தனது வீட்டிற்கே வந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பரிமளா புகார் அளித்திருந்தார்.

மேலும், அவர் திருச்சி அரசு மருத்துவமனையின் முன்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். இது தவிர, ”இன்ஸ்பெக்டர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடருவேன்” என்றார்.
இந்நிலையில், அவருக்கு காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மற்றொரு நபரிடம் காவல் ஆய்வாளர், ‘அவளை கொலை செய்து மூட்டையில் கட்டி முள்காட்டிற்குள் வீசி விடுவேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என்று கூறியுள்ளார்.

அந்த ஒலிப்பதிவை அவர் வாட்ஸ் அப்பில் பரிமளவிற்கு அனுப்பியுள்ளார். பரிமாள தற்போது அதனை ’வாட்ஸ் அப்’-இல் வெளியிட்டுள்ளார். மேலும், இதனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :