இறந்த குட்டியை காவல் காத்த தாய் நாய்... கண் கலங்கவைக்கும் பாசம் !

dog
sinoj kiyan| Last Modified வியாழன், 13 பிப்ரவரி 2020 (20:35 IST)
இறந்த குட்டியை காவல் காத்த தாய் நாய்... கலங்கவைக்கும் வீடியோ

பெரம்பூர் மாவட்டம் ஒகலூர் அண்ணா நகரில் தனது குட்டி
நாய் இறந்து போனதற்காக கவலை அடைந்த தாய் நாய்

அதனைச் சுற்றி வந்து ஈக்கள் அண்டாமல் பார்த்துக் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இரண்டு தினங்களுக்கு
முன்பு ஒரு குட்டி நாய் நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியே வந்த இரு சக்கரவாகனம் ஒன்று அந்த நாய் மீது மோதிச் சென்றது. அதில் படுகாயம் அடைந்த குட்டிநாய், அங்கிருந்து நடக்கமுடியாமல் இருந்தது.


அதைப் பார்த்து
தாய் நாய், அதற்கு பாலூட்டியதுடன், அதைக் காப்பாற்ற முயற்சி செய்து பலனளிக்கவில்லை. அதனால் குட்டி நாய் நேற்று இறந்தது. அதன்பின் தனது குட்டி நாய் மீது ஈ எறும்பு அண்டாமல் தாய் நாய் சுற்றிச் சுற்றி வந்த
சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :