வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2015 (04:19 IST)

தாலி விவகாரம்: குஷ்பு கொடும்பாவி எரிப்பு

தாலி அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அதில் சமூகம் எதையும் சொல்லக் கூடாது என்று கருத்து தெரிவித்த நடிகை குஷ்புவின் படத்தையும், கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
 

 
பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலில் யுனெஸ்கோ  பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி தலைமையில் நடைபெற்றது.
 
கருத்தரங்கில்,  நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசுகையில், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 13ம் தேதி சென்னை வந்தேன். 29 ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது பெரியார் திடலில் நடைபெறும் பெரியார் பிறந்த நாள் விழாவில் இன்று பேசுவதை தான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்.
 
கி.வீரமணி, பேசியபோது, படிக்காதவர்களுக்கு தான் துணிச்சல் அதிகம் என்றார். நான் படிக்காதவள்தான். அதனால்தான் எனக்கு துணிச்சல் இருக்கு போல கொஞ்சம் திமிரும், கொழுப்பும் இருக்கு.
 
பெண்கள் எந்த கருத்தையும் வெளியே பேசுவதற்கே தயங்கும்போது துணிஞ்சு வந்து பேச ஒரு திமிர் வேணும். அது எனக்கு இருக்கு. அது பெரியார்கிட்ட இருந்து வந்தது. தாலி அணிவது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அதில் சமூகம் எதையும் சொல்லக் கூடாது.
 
இன்று ஏ.ஆர் ரஹ்மானுக்கு பத்வா கொடுக்கிறார்கள். அப்படி செய்ய நீங்க யார்? உங்களுக்கு பயந்து நாங்கள் பேச வேண்டுமா? எனக்கு ஆறாவது அறிவு இருக்கு. உண்மையை பேசக்கூடிய தைரியமிருக்கு என்று பேசினார்.
 
அவரது இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தாலி விவகராத்தில் நடிகை குஷ்பு தனது பேச்சை மீண்டும் திரும்ப வேண்டும் என்று கோரி, விஸ்வஇந்து பரிஷத் இயக்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போராடட்டம் நடத்தினர்.
 
மேலும், நாகர்கோவிலில் வடசேரி சந்திப்பில், மாவட்ட தலைவர் சுபாமுத்து தலைமையில், நடிகை குஷ்புவின் உருவபடங்களையும், அவரது கொடும்பாவியை எரித்தனர்.