செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (20:13 IST)

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1957  பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

கடந்த வருடம் சீனாவில் இருந்து முதன் முதலில் கொரொனா தொற்று உருவானது. தற்போது, கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரிதுக் குறைந்துவந்த நிலையில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.

இன்று தமிழகத்தில் மேலும் 1957 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது, இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,63,544  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரொனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,068  ஆகும். இதுவரை கொரோனாலிருந்து மொத்தம் 25,09, 029 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28  ஆகும். இதுவரை கொரொனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34, 130  ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 189  பேருக்கு உறுதியாகியுள்ளது. இங்கு மொத்தம் 5,38, 521  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போது, கொரொனாவுக்கு 20,385 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.