புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (09:42 IST)

ராஜகோபாலனுக்கு ஜூன் 8 வரை நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

சென்னை பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அவர் மீதான குற்றங்களுக்கு தேவையான ஆதாரங்கள் இருப்பதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 8-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
இதனை அடுத்து ராஜகோபாலன் இன்னும் சற்று நேரத்தில் சிறையிலடைக்கப்படுவார் என்றும் ஜூன் எட்டாம் தேதி வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்யவும் போலீசார் திட்டமிட்டு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது