தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ்கள் வேலைநிறுத்தம்? – கோர்ட் இடைக்கால தடை
தீபாவளி அன்று வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்திற்கு நிதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
30 சதவீதம் ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு ஆம்புலன்ஸ் சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை தமிழக அரசு கண்டுகொள்ளாததால் தீபாவளி அன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இது சம்மந்தமாக சேலத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் உயிர்காக்கும் அத்யாவசிய வேலைகளில் ஈடுபடுவோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாதென்ற சட்டப்பிரிவை குறிப்பிட்ட அவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்ககோரியிருந்தார்.
அந்த மனுவை ஏற்று விசாரித்த நீதிமன்றம் வேலை நிறுத்ததிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனால் இதை ஏற்று ஆம்புலன்ஸ் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை கைவிடுவார்களா அல்லது திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை. எனவே தீபாவளி அன்று ஆம்புலன்ஸ்கள் இயங்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பீதியை உண்டாக்கி உள்ளது.