1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:15 IST)

அனுமதி தேவையில்லை; தகவல் சொன்னா போதும்! – சமரசமாக தீர்ப்பளித்த நீதிமன்றம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க அரசு விதித்த தடை தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். இவ்வாறு நிவாரண உதவிகள் வழங்குவதில் சமூக இடைவெளி சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என தன்னிச்சையாக நிவாரண உதவிகள் வழங்க தடை விதித்தது தமிழக அரசு. மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் நிவாரண பொருட்களை வழங்க அனுமதி வாங்க தேவையில்லை, ஆனால் இரண்டு நாட்கள் முன்னரே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நிவாரண பொருட்களை வழங்க நான்கு பேருக்கு மேல் செல்லக்கூடாது என சில விதிமுறைகளையும் அறிவுறுத்தியுள்ளது.