வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (07:56 IST)

முதுமலையில் யானைகள் காப்பகத்தில் கொரோனா சோதனை!

முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனிதர்களை மட்டுமே பாதித்து வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வாரம் வண்டலூர் பூங்காவில் இருந்த 9சிங்கங்களை பாதித்தது. அதில் ஒரு பெண் சிங்கம் தொற்று பாதிப்பால் உயிரிழந்தது. இதனால் இப்போது விலங்குகள் இடையே இந்த தொற்று பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் சரணாலயத்தில் உள்ள கும்கி யானைகள் உள்ளிட்ட 28 யானைகளுக்கும் கொரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த மாதிரிகள் உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.