சுவாதி கொலையில் தொடர்புடையதாக கூறப்படுபவர் மோடியுடன் இருப்பதால் சர்ச்சை

சுவாதி கொலையில் தொடர்புடையதாக கூறப்படுபவர் மோடியுடன் இருப்பதால் சர்ச்சை


Dinesh| Last Updated: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (09:25 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கு தொடர்பாக, பிரான்சு நாட்டில் இருந்து தமிழச்சி என்பவர் தொடர்ந்து பல சர்ச்சைக்குரிய பதிவுகளை,  ஆதாரமின்றி பதிவு செய்து வருகிறார்.

 


இந்நிலையில், அவர் தற்போது, செய்துள்ள பதிவில், சுவாதி கொலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க. முன்னணி நிர்வாகி கருப்பு முருகானந்தத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அவர், பிரதமர் மோடியுடன் இருப்பது போன்ற  புகைப்படத்தையும் தமிழச்சி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டதால், அந்த புகைப்படத்தை, முகநூலில் இருந்து அவர் நீக்கியுள்ளதாக தெரிகிறது.

கருப்பு முருகானந்தம் பா.ஜ.கவில் செல்வாக்கு பெற்றவர், அதனால், கடந்த மக்களவை தேர்தலின்போது அவருக்கு சீட் வழங்கப்பட்டது.  அவர் மீது பல கொலை வழக்குகள் இருப்பது குறிப்படத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :