1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (10:00 IST)

தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு? நாம் தமிழர் பிரமுகர்கள் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை!

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் மீது கவனம் செலுத்தும் தேசிய புலனாய்வு முகமை பல இடங்களில் அவ்வபோது திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதலே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி என பல பகுதிகளில் பல நபர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் வயலூர் சாலையில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகரும், யூட்யூபருமான சாட்டை துரைமுருகன் வீட்டிலும் காலையில் இருந்தே புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தென்காசி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த நா.த.க பொறுப்பாளர் மற்றும் யூட்யூபர் விஷ்ணு ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. என்.ஐ.ஏ சோதனை நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீட்டில் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K