1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (20:07 IST)

சிறப்பு காட்சியை ரத்து செய்தவர்கள் இதையும் கொஞ்சம் செய்யலாமே?

விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய திரைப்படங்கள் வரும் 25ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு கூறிவிட்டது. இதனால் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் 
 
இந்த சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்ததற்கு முக்கிய காரணமாக ரூபாய் 100 டிக்கெட்டை 500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாகவும், இந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்ததன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் விளக்கம் அளித்தார் 
 
இந்த நிலையில் சிறப்புக் காட்சியை அதிக கட்டணம் காரணமாக ரத்து செய்தது தமிழக அரசு, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்கலாமே? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியபோது, ‘சென்னையிலிருந்து சேலத்திற்கு ஆம்னி பேருந்தில் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதி கொண்ட பயணத்திற்கு புதன்கிழமை அன்று ரூபாய் 500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் அதே பயணத்தை வெள்ளிக்கிழமை மேற்கொள்ள ரூபாய் ஆயிரத்து 500க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது 214% அதிகமாகும்
 
இதேபோல் சென்னையில் இருந்து ஒவ்வொரு ஊருக்கும் இத்தகைய கட்டணம் பல மடங்கு கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இத்தகைய கட்டண கொள்ளை குறித்து தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் 
 
சிறப்புக் காட்சியில் காட்டிய கவனத்தை இதிலும் காட்டலாமே என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது