1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : புதன், 20 ஜூலை 2016 (20:48 IST)

சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷிற்கு நிபந்தனை ஜாமின்

சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷிற்கு நிபந்தனை ஜாமின்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷூக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது நீதிமன்றம்.



சேலம், முள்ளுவாடி கேட் பகுதி ரயில் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் பியுஷ் மனுஷ் கடந்த 8-ஆம் தேதி போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவரைக் கட்டிப் போட்டு 30 சிறைக் காவலர்கள் தாக்கி உள்ளதாக அவரது மனைவி புகார் அளித்தார்.
 
இதை அடுத்து, அவருடன் கைதான இருவருக்கு ஜாமின் வழங்கிய, நீதிமன்றம், இவருக்கு தர மறுத்த நிலையில், தற்போது, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம், பியுஷ் மனுஷுக்கு காலை, மாலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி 3 வாரம் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.