ஓடிப்போன மகன்; கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட தாயின் நிலை என்ன?

Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (17:50 IST)
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் (25) உள்ளார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி (60) என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். 

 
இந்நிலையில் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. அப்பெண்ணின் தந்தை, வாலிபரின் தயாரிடம் தன் பெண் எங்கே எனக் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.  
 
செல்வியை கம்பத்தில் கட்டி வைத்து பெண்ணின் தந்தை தாக்கினார். இதில் செல்வி பலத்த காயம் அடைந்த செல்வியை அக்கம் பக்கத்தவர்கள் மீட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்வி வெளியேற வேண்டும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்ததால், கிராமத்திற்கு செல்லமுடியாமல் மருத்துவமனைக்கு வெளியே காத்திருப்பதாக செய்திகள் வெளியானது. 
இந்நிலையில், செல்வியின் நிலையில் குறித்து விசாரிக்கப்பட்டத்தில்,  செல்வி அரசு மருத்துவமனையில் உள்ளார். தற்போது கொளஞ்சி ஜாமீனில் விடபட்டுள்ளார். அவர் பெரியசாமி தனது மகளை கடத்தி சென்றதாக பதிவான வழக்கை திரும்பப் பெற்றுவிட்டார். செல்வியை துன்புறுத்திய வழக்கை நடத்துவதில் எந்த மாற்றமும் இல்லை என தகவல் கிடைத்துள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :