1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2023 (17:02 IST)

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார்.. மீண்டும் ஒரு வேங்கை வயலா?

வேங்கை வயல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் இருந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வேங்கை வயல் போலவே மீண்டும் தர்மபுரி மாவட்டம் பென்னகரம் அருகே உள்ள அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் வந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பனைக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்த நிலையில் பள்ளி ஆசிரியர் குடிநீர் தொட்டியை ஆய்வு செய்த போது, மலம் கலந்து இருந்தது தெரிய வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில்  பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மர்ம நபர் தண்டிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva