வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (12:23 IST)

சசிகலாவுக்கும், அஜித்துக்கும் தான் உண்மையான போட்டி

சசிகலாவுக்கும் அஜித்துக்கும் தான் உண்மையான போட்டி நிலவுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.


 

 
2016ஆண்டு முடிவடைந்து 2017 புத்தாண்டுக்காக அனைவரும் காத்துக் கொண்டிக்கிறோம். தற்போது 2017ஆம் ஆண்டுக்கான காலண்டர்கள் அச்சடிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. 
 
இந்தநிலையில் சசிகலா மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் புகைப்படங்களே அதிக அளவில் அச்சடிக்க ஆர்டர் வருவதாக காலண்டர் அச்சகம் நடத்துபவர்கள் தெர்வித்துள்ளனர். 
 
இதன்மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் யார் என்ற முறையில் யாருடைய புகைப்படம் அதிக அளவில் வெளியாகும் என்று சசிகலாவுக்கும், அஜித்துக்கும் இடையே போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.