வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:51 IST)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

nallakkannu
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
 தற்போது நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் பொது மருத்துவர்கள் மற்றும் சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
மேலும் நல்லக்கண்ணு அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva