திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 அக்டோபர் 2018 (13:31 IST)

போதை மாத்திரை தராத மருந்து கடையை அடித்து உடைத்த இளைஞர்கள்

சென்னையை அடுத்த படப்பையில் உள்ள ஒரு மருந்துகடையை இரண்டு மாணவர்கள் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

படப்பை பேருந்து நிலையத்திற்கு அருகில் சரவணன் என்பவர் மருந்தகம் வைத்துள்ளார். அந்த மருந்துக்கடைக்கு இன்று வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் சரவணனிடம் போதை தரும் மாத்திரைகள் சிலவற்றைக் கேட்டுள்ளனர். மருத்துவர் பரிந்துரையில்லாமல் அந்த மாத்திரைகளை தர முடியாது என கடைகாரர் கூறியுள்ளார்.

ஆனால் அதை ஏற்காத அந்த மாணவர்கள் சரவணனோடு  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் அவர் மருந்துகளைக் கொடுக்க மறுத்து விட்டார். அதனால் கோபமாக வெளியே சென்ற அவர்கள் சிறிது நேரத்தில் கல் ஒன்றை எடுத்து மருந்தகத்தில் இருந்த கண்ணாடிப் பெட்டியின் மீது போட்டு உடைத்தனர். மற்றொரு மாணவர் தனது கையில் இருந்த பெல்ட்டால் மருந்து பெட்டிகளை அடித்து உடைத்தார். மேலும் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தால் சரவணனையும் தாக்கியுள்ளனர். பொருட்களை உடைத்து விட்டு இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.

இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த சிலர் ஓடியவர்களைப் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலிஸ் விசாரணை நடைபெற்றுள்ளது.