திருநங்கையை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவர்!


Caston| Last Modified செவ்வாய், 19 ஜூலை 2016 (12:58 IST)
பொறியியல் படித்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் திருநங்கை ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 7 மாதம் அவருடன் குடும்பம் நடத்திய மாணவரை அவரது பெற்றோர்கள் பிரித்து சென்றுவிட்டனர்.

 
 
சேலம் ஆத்தூரை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சியில் பொறியியல் படித்து வந்தார். இவருக்கும் அழகு நிலையம் ஒன்றில் பணிபுரிந்த ஸ்ரீதேவி என்ற திருநங்கைக்கும் காதல் ஏற்பட்டது.
 
இதனையடுத்து இருவரும், திருமணம் செய்துகொண்டு, ஸ்ரீதேவியின் வீட்டில் கடந்த 7 மாதமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தங்கள் மகன் திருநங்கையை திருமணம் செய்துகொண்டு திருச்சியில் வசித்து வந்ததை அறிந்த கணேசனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து போலீசார் திருநங்கை ஸ்ரீதேவியை அழைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் தான் கணேசனுக்கு 7 மாதமாக சாப்பாடு போட்டுள்ளதாகவும், அதற்கான பணத்தை நஷ்ட ஈடாக கொடுத்தால் பிரிந்து விடுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
 
பின்னர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடச் சொல்லி மாணவன் கணேசனை பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.


இதில் மேலும் படிக்கவும் :