1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (15:53 IST)

லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து….13 மாணவிகள் படுகாயம்

bus accident
கரூர் மாவட்டத்தில் முன்னாள் சென்ற லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் 13 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த எல்லையாம் பாளையத்தில் தனியார் பெண்கள் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்தக் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மா நகரில் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருக்கும்போது, சாலையில் பாம்பு செல்வதைப் பார்த்த முன்னாள் சென்ற இருசக்கர வாகன ஓட்டி நடு ரோட்டில் பிரேக் போட்டு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரிப் பேருந்து முன்னால் சென்ற லாரி மீது பலமாக மோதிவிட்டது.

இதில், பேருந்தில் அமர்ந்த 13 மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்களை மீட்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.