ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (10:55 IST)

ஸ்கேன் மெஷினாலேயே கண்டுபிடிக்க முடியாது; மலக்குடலில் மறைத்து வைத்த தங்கம்!

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் மலக்குடலில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த கும்பலை அதிகாரிகள் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்

துபாயின் ஷார்ஜாவிலிருந்து கோயம்புத்தூர் வந்த பயணிகள் விமானத்திலிருந்து வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் வழக்கம்போல சோதனை செய்து வந்தனர். அப்போது நபர் ஒருவர் மிகவும் மிரட்சியாக காணப்பட்டத்தை கண்டு அவரையும், அவருடன் வந்தவர்களையும் தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது திரவ வடிவில் தங்கத்தை மலக்குடலில் வைத்து அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை சோதனை செய்த அதிகாரிகள் அவர்கள் உடலில் இருந்து தங்கத்தை எடுத்தனர். மொத்தமாக ரூ.2.85 கோடி மதிப்புள்ள 5 கிலோவுக்கு அதிகமான தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். மலக்குடலில் இவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை ஸ்கேன் மெஷினால் கண்டறிய முடியாது என்றும், விசாரணையில் மூலமே கண்டுபிடிக்க இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.