1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (16:29 IST)

முதல்வர் எடப்பாடியை கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு சென்ற தினகரன்: ஓபிஎஸ் அணி பாய்ச்சல்!

முதல்வர் எடப்பாடியை கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு சென்ற தினகரன்: ஓபிஎஸ் அணி பாய்ச்சல்!

தினகரனின் தலைமையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றதால் இன்று அவர் கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


 
 
ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் சிக்கியது.
 
இந்த பணத்தை விநியோகித்ததில் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி உட்பட ஏழு அமைச்சர்கள் பெயரும் உள்ளது. தினகரனால் இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிற்கிறார்கள்.
 
தினகரனுக்காக வாக்காளர்களுக்கு முதல்வர் பணம் கொடுத்ததாக, ஆவணம் வெளியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது. தினகரன் முதல்வரை கீழ்த்தரமான நிலைக்கு இட்டு சென்றுள்ளார். அவர் நீண்ட கால அதிமுக தொண்டராக எங்களோடு இணைந்து செயல்பட்டவர். கீழ்த்தரமானவரை தலைவராக ஏற்றதால், கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என முனுசாமி கூறியுள்ளார்.