1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 மார்ச் 2022 (12:43 IST)

ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்ற பின் இரண்டு முறை டெல்லி சென்றுள்ளார் என்பதும் ஒரு முறை பிரதமர் மோடியை சந்தித்துள்ளார் என்பதும் ஒரு முறை ஜனாதிபதியை சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மூன்றாவது முறையாக ஏப்ரல் 2ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயத்தை ஏப்ரல் 2ஆம் தேதி திறந்து வைக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.