முதல்வர் ஆரம்பித்த வைத்த ‘நம்ம ஸ்கூல் திட்டம்: வட்டியுடன் நல்ல சமுதாயம் உருவாகும்!
முதல்வர் ஆரம்பித்த வைத்த நம்ம ஸ்கூல் திட்டம்: வட்டியுடன் நல்ல சமுதாயம் உருவாகும்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசிய போது தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே தற்போது இரண்டாவது மாநிலமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்
மேலும் ரூ 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பள்ளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்வதற்கான ஒரு முன்னேற்பாடு தான் இந்த நம்ம ஸ்கூல் திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது எல்லா துறையிலும் முதலீடு செய்தால் லாபம் வரும் ஆனால் எங்கள் துறையில் மட்டும் வட்டியுடன் சேர்த்து நல்ல சமுதாயம் உருவாகும் என்று தெரிவித்தார்
Edited by Mahendran