1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (21:01 IST)

டெல்லி பயணம் முடிந்தது: சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

CM Stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரெளபதி முர்மு மற்றும் துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெகதீப் தன்கர் ஆகியோர்களை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் 
 
இதனை அடுத்த பிரதமர் மோடியை சந்தித்த  மு க ஸ்டாலின் தமிழக திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் விளையும் தானியங்கள் தொகுப்பை அவர் பிரதமருக்கு பரிசாக அளித்ததாகவும் தெரிகிறது.
 
இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துவிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் விமானம் மூலம் சற்று முன்னர் சென்னை திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன