ஞாயிறு, 24 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (10:40 IST)

சென்னையில் டி.எம்.செளந்தரராஜன் சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டும் விழா..

டிஎம் சௌந்தரராஜன் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு டிஎம் சௌந்தரராஜன் சாலை என முதலமைச்சர் முக ஸ்டாலின் பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது. தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகராக இருந்தவர் டிஎம் சௌந்தரராஜன் என்பதும் இவர் ஆயிரக்கணக்கான திரைப்பட மற்றும் பக்தி பாடல்களை பாடியுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் டி.எம். சௌந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி சென்னை மந்தவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்த சாலைக்கு டி எம் சௌந்தராஜன் சாலை என முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார்.
 
வரும் 24 தேதி இந்த பெயர் சூட்டு விழா நடைபெற இருப்பதாகவும் இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் இந்த நிகழ்ச்சியில் டிஎம் சௌந்தரராஜன் பாடிய பாடல்களை நினைவு கூறும் வகையில் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் டிஎம் சௌந்தரராஜன் சாலை என அறிவிக்க உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு டிஎம்எஸ் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran