வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (15:20 IST)

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை : மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல்வர் அறிவிப்பு..!

Mk Stalin
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடமாக அந்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தி பெண்கள் மத்தியில் இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அனைத்து மகளிர்க்கும் வரும் நிதிநிலை அறிக்கையில் மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்குவது குறித்து அறிவிப்பினை வெளியிட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 
பெண்ணுரிமை என்பது வெறும் சொற்களால் மட்டுமல்ல நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சி திட்டங்களால் செய்து காட்டுவது தான் திராவிட மாடல் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என்றும் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பெண்ணின காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம் என்றும் மகளிர் தின வாழ்த்து செய்தியில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran