செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2016 (08:51 IST)

புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொதுக்குழுவில் பொங்கி எழுவாரா?

புறப்பட்டார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: அதிமுக பொதுக்குழுவில் பொங்கி எழுவாரா?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்கு அவர் வகித்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க தயாரிகிவிட்டது அதிமுக.


 
 
இன்று நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் புதிய பொதுச்செயலாளர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்படும். சசிகலா தான் அடுத்த பொதுச்செயலாளர் என திமுக மூத்த நிர்வாகிகள் வெளிப்படையாக கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதற்கு தடையாக இருக்கிறார் எனவும் அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
 
இன்னும் 45 நிமிடத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் இருந்து சற்று நேரத்திற்கு முன்னர் புறப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளர் ஆகாத நிலையில் பன்னீர்செல்வம் அந்த பதவியை வகிப்பார்.
 
ஆனால் தொண்டர்கள் மத்தியில் சசிகலா தலைமைக்கு எதிர்ப்பே உள்ளது. இதனை கட்சியின் பொருளாளராக இருக்கும் முதல்வர் பன்னீர்செல்வம் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த சில தினங்களாக சசிகலாவுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சரியான புரிதல் இல்லாமல் மோதல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அவர் பொருளாளர் என்பதால் இந்த கூட்டத்தில் கட்சியின் வரவு செலவு கணக்கை தக்கல் செய்வார் என கூறப்படுகிறது. முன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்த கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.