1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (13:15 IST)

விமான நிலையத்துக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா

விமான நிலையத்துக்கு சென்று புதிய ஆளுநரை வரவேற்ற முதல்வர் ஜெயலலிதா

தமிழக ஆளுநராக இருந்த ரோசையாவின் 5 வருட பதவி காலம் முடிவடைந்ததையடுத்து. அவருக்கு பதிலாக தற்போதைய பொறுப்பு ஆளுநரை நியமித்தது மத்திய அரசு. மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இருந்த வித்தியாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


 
 
இன்று மாலை ராஜ்பவனில் புதிய ஆளுநராக வித்தியாசாகர் பதவியேற்க உள்ளார். காலை 11.30 மணியளவில் புதிய ஆளுநர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை புரிந்தார். புதிய ஆளுநருக்கு தமிழக அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
புதிய ஆளுநர் வித்தியாசாகர் ராவை தமிழக முதல்வர் ஜெயலலிதா விமான நிலையத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தலைமை  செயலாளர் ராம்மோகன் ராவ், டிஜிபி அசோக்குமார், காவல் ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.