1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (00:28 IST)

முதல்வர் ஜெயலலிதா மரணம்: அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

முதல்வர் ஜெயலலிதா மரணம்: அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.


 
 
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று முன்தினம் திடீரெனெ மாரடைப்பு ஏற்பட்டது.
 
அவருக்கு எக்மோ கருவி மூலம் செயற்கை சுவாசம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறிவந்த அப்பல்லொ மருத்துவமனை திடீரென பரவிய வதந்தியை மறுத்து அவருக்கு சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறியது.
 
இந்நிலையில் தற்போது முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அதிமுகவினரிடையும் தமிழக மக்களிடையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.