1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 24 மே 2017 (16:49 IST)

மூன்று பக்கமும் சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

மூன்று பக்கமும் சிக்கித் தவிக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது முதல்வர் பதவியையும் ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள தினமும் பெரும் போராட்டமே நடத்தி வருவதாக அதிமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசுகிறார்கள்.


 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் 8 எம்எல்ஏக்கள் தலைமைச்செயலகத்துக்கு வந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
 
தொகுதி மக்களின் பிரச்சனைக்காகத்தான் முதல்வரை பார்க்க வந்ததாக அவர்கள் கூறினாலும் அரசியல் வட்டாரத்தில் வேறு மாதிரியாக கூறப்படுகிறது. தங்கள் பக்கம் இந்த 8 எம்எல்ஏக்கள் மட்டுமில்லாமல் மேலும் 10 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும் கூறிய அவர்கள் மறுபடியும் அமைச்சரவையில் இடம் கொடுக்க நெருக்கடி கொடுத்ததாக தகவல்கள் வருகின்றன.
 
அடுத்த நாள் மேலும் இருந்த 10 எம்எல்ஏக்களையும் தலைமைச்செயலகத்துக்கு அனுப்பி முதல்வரை சந்திக்க வைத்து தங்கள் பலத்தை காட்டியிருக்கிறார்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில் தினகரனுக்கு ஆதரவாகவும் சில எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் தொடக்கத்தில் இருந்து பன்னீர் அணியும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்படி மூன்று பக்கங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிக்கித் தவிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசுகிறார்கள்.