உடைந்தது சசிகலா அணி?: செங்கோட்டையன், எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் மோதல்?
உடைந்தது சசிகலா அணி?: செங்கோட்டையன், எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் மோதல்?
ஜெயலலிதா இறந்த பின்னர் ஒற்றுமையாக இருந்த அதிமுக தற்போது சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணியாக பிரிந்து நிற்கிறது. பன்னீர்செல்வம் அணி ஆட்சியமைக்க கூடாது என்பதற்காக அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைபிடித்து வைத்துள்ளது சசிகலா தரப்பு.
ஆனால் தற்போது சசிகலா அணிக்குள்ளேயே பிளவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் வருகின்றன. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததால் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா தரப்பு முயன்று வருகிறது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அந்த அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பணிப்போர் நிலவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஆளுநரை பார்க்க எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு வராமல் அரை மணி நேரம் தாமதமாக வந்தனர்.
இதனால் கவர்னரை பார்க்க வர ஏன் தாமதமானது என செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சமி இடைய வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது கைகலப்பு வரை சென்றதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் இன்று காலையும் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.