1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (10:34 IST)

குழந்தைகளுக்கு தாய் வழியில் சாதிச் சான்றிதழ்???

புதுச்சேரி மாநிலத்தில் பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.


புதுச்சேரி மாநில பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அம்மாநில முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதேபோல் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் பாரதியார் பல்கலைகழக கூடத்தில் ரூபாய் 11.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு கழகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும், காரைக்கால் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 80 கோடி செலவில் புதிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சட்ட பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்ட வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தனியார் பங்களிப்புடன் மீண்டும் கூட்டுறவு சர்க்கரை ஆலையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பிள்ளைகளுக்கு தாய் வழியில் சாதிச்சான்றிதழ் தர ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தற்போது வரை மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தந்தை வழியில் பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.