1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 8 மே 2017 (13:16 IST)

சிறுவர்களின் காம வெறியாட்டம்: பிச்சைக்காரியையும் விட்டு வைக்காத கொடூரம்!

சிறுவர்களின் காம வெறியாட்டம்: பிச்சைக்காரியையும் விட்டு வைக்காத கொடூரம்!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே 7 பேர் கொண்ட கும்பல் தனியாக செல்லும் பெண்களை கடத்தி குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சென்று அவர்களை பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. அந்த கும்பலில் இரண்டு பேர் 17 வயதான சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் தனியாக வந்து கொண்டிருந்தபோது கண்ணுப் பொத்தை காட்டுப்பகுதிக்கு சிலரால் கடத்தப்பட்டார். அங்கு அவர்கள் அந்த 63 வயதான பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தனது நண்பர்கள் சிலரையும் வரவழைத்து கும்பலாக சீரழித்துள்ளனர்.
 
மொத்தம் 7 பேர் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்து பின்னர் தலையில் கல்லைப் போட்டு கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் 2 பேர் 17 வயதான சிறுவர்கள். இந்த இரண்டு சிறுவர்களுக்கு தான் இதில் முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இவர்கள் 7 பேரும் கும்பலாக செயல்பட்டு தனியாக பெண் யாராவது சிக்கினால் அவர்களை கடத்தி அதே கண்ணுப் பொத்தை பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் சில பிச்சைக்கார பெண்களும் சிக்கி பலாத்காரம் செய்யப்பட்டு பலியாகியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
 
இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுவரை 5 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. சிறுவர்கள் நடத்திய இந்த காம வெறியாட்டம் கன்னியாக்குமரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இது தவிர வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.