செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (09:30 IST)

தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்தம்: புயலாக மாறினால் தமிழகத்திற்கு பாதிப்பு

சமீபத்தில் வங்கக்கடலில் தோன்றிய ஓகி புயல் குமரி மாவட்டத்தை புரட்டி போட்டு கேரளாவையும் ஒரு கை பார்த்துள்ள நிலையில் தற்போது தெற்கு அந்தமான் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியிருப்பதாகவும், இது வலுவடைந்தால் புயல்சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையுடன் கூடிய புயல்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசு இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் போன்று இந்த புதிய புயல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்களுக்கு ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.