வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (15:26 IST)

தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழ் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட அறிஞர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்   21 தமிழறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றி வரும் தமிழ்ப் பேரறிஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியய வருகிறது.

இந்நிலையில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில்   21 தமிழறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அதில், பேரறிஞர் அண்ணாவிருது   நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார், பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன், சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியர் ஆகியியோருக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகை ரூ.100000 லிருந்து ரூ.200,000  உயர்த்தியும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை போர்த்தி முதல்வர் விருதாளர்களை கவுரவித்தார்.