வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (17:36 IST)

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் அவரது சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை!

மறைந்த முன்னாள் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளையொட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்தும் மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர்.
 
தொடர்ந்து சர்வமத பிராத்தனையுடன் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது பின்னர் சத்பவனாதிவாஸ்  உறுதி மொழியை முதலமைச்சர் ரங்கசாமி வாசிக்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர், காவல்துறை டிஜிபி உள்ளிட்ட அரசு செயலர்கள் ஏற்றுக்கொண்டனர்.