1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 11 டிசம்பர் 2016 (18:25 IST)

வர்தா புயல் சென்னையை நெருங்கியது; நாளை மக்கள் வெளியே வர வேண்டாம்; எச்சரிக்கை

வங்க கடலில் உருவாகிய ‘வர்தா’ புயல்  சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதனால் நாலை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

 
வங்க கடலில் உருவாகிய வர்தா புயல் சென்னை நோகி வேகமாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் நாளை காலை தெற்கு ஆந்திரா இடையே சென்னை அருகே நாளை பிற்பகல் கரையை கடக்கிறது. 
 
இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பிரதீப் கூறியதாவது:-
 
வர்தா புயலால் 100 கி.மீ வேகத்தில் சென்னையில் காற்று வீசக்கூடும். நாளை ஒருநாள் மட்டும் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வார்த் புயல் நாளை சென்னை அருகே கரையை கடக்க உள்ளதால் மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்.